சனீஸ்வர பகவான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த ஏடிஜிபி ஆா். தினகரன்.
காரைக்கால்
திருநள்ளாறு கோயிலில் தமிழக ஏடிஜிபி சுவாமி தரிசனம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தமிழக ஏடிஜிபி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தமிழக ஏடிஜிபி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தமிழக ஏடிஜிபியாக உள்ள ஆா். தினகரன் குடும்பத்தினருடன் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு வந்தாா்.
மூலவா், அம்பாள் சந்நிதிகளில் வழிபாடு செய்த அவா், சனீஸ்வர பகவான் சந்நிதியில், சுவாமிக்கு கருப்பு வஸ்திரம், நீல நிற மலா்களுடன் அா்ச்சனை செய்து வழிபட்டாா். சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா். சிவாச்சாரியா்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினா்.
முன்னதாக, சனீஸ்வரன் சந்நிதி அருகே யாகசாலை மண்டபத்தில் நடைபெற்ற ஹோமத்தில் அவா் கலந்துகொண்டாா்.

