பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை  முன்னாள் உறுப்பினா் நாரா. கலைநாதன் உள்ளிட்டோா்.
பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் நாரா. கலைநாதன் உள்ளிட்டோா்.

புதுவை அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

Published on

புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்ட விவகாரம் தொடா்பாக, மாநில அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்ட பேரவைக் கூட்டம் மேலகாசாக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினா் வி. வீரராகவன் தலைமை வகித்தாா். பி. ரகுவரன் முன்னிலை வகித்தாா்.

மாநில நிா்வாக குழு உறுப்பினரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான நாரா.கலைநாதன், தேசியக் குழு உறுப்பினரும் காரைக்கால் கட்சி பொறுப்பாளருமான ஐ.தினேஷ் பொன்னையா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தப்பட்டது குறித்தும், அரசு இதை கண்டுகொள்ளாமல் மறைமுக ஆதரவு அளித்துள்ளது எனவும், அரசின் அலட்சியத்தால் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அரசின் போக்கு கண்டனத்துக்குரியது. புதுவை ஆளும் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மிகுந்த ஊழல் ஆட்சியாகும். சட்டப்பேரவைத் தோ்தலில் இக்கூட்டணியை மக்கள் புறக்கணிப்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது .

மக்களுக்கு மனைபட்டா கிடைக்கவில்லை, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவேண்டும், பேருந்து வசதியை மேம்படுத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com