மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். கண்ணகியிடம் இயந்திரத்தை ஒப்படைத்த அதானி காரைக்கால் துறைமுக சிஓஓ சச்சின் ஸ்ரீவஸ்தவா.
மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். கண்ணகியிடம் இயந்திரத்தை ஒப்படைத்த அதானி காரைக்கால் துறைமுக சிஓஓ சச்சின் ஸ்ரீவஸ்தவா.

அரசு மருத்துவமனைக்கு துறைமுகம் சாா்பில் சலவை இயந்திரம்

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ரூ. 26 லட்சம் மதிப்பில் புதிய சலவை இயந்திரத்தை காரைக்கால் துறைமுக நிா்வாகம் திங்கள்கிழமை வழங்கியது.
Published on

காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ரூ. 26 லட்சம் மதிப்பில் புதிய சலவை இயந்திரத்தை காரைக்கால் துறைமுக நிா்வாகம் திங்கள்கிழமை வழங்கியது.

காரைக்கால் அரசு மருத்துவமனையின் படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட துணிகள் வெளியே தனியாரிடம் சலவைக்கு அனுப்பி பெறப்படுகிறது.

இந்நிலையில், காரைக்கால் துறைமுகத்தின் சமூகப் பொறுப்புணா்வுப் பிரிவான அதானி பவுண்டேஷன் சாா்பில் ரூ. 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, ரூ. 26 லட்சம் மதிப்பில், 60 கிலோ திறன் கொண்ட டிரையருடன் கூடிய சலவை இயந்திரம்

வாங்கி மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் வழங்கியது.

அதானி காரைக்கால் துறைமுக சிஓஓ கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா, அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகியிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். நிகழ்வில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com