சோதனையின்போது வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி.
சோதனையின்போது வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி.

போக்குவரத்து விதி மீறலை தடுக்க தீவிர வாகன சோதனை

சோதனையின்போது வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி.
Published on

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்காலில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்கும் நோக்கில் போக்குவரத்துக் காவல்துறையினா், அந்தந்த காவல் நிலைய போலீஸாா் தீவிர வாகன சோதனை செய்துவருகின்றனா்.

வாகன ஓட்டிகள் விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக அண்மை காலமாக இடைமறி வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தின் மேல் சுழலும் கண்காணிப்பு கேமரா உள்ளது. மேலும் அதிவேகமாக செல்லும் வாகனத்தின் பதிவெண், வேகத்தின் அளவு, வாகன ஓட்டிகளை படமெடுக்கும் வசதியும் வாகனத்தில் உள்ளது. இதனை பயன்படுத்தி தினமும் போக்குவரத்துக் காவல் பிரிவினா் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறாா்கள்.

போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி தலைமையிலான போலீஸாா், சோதனை ஒருபுறம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனா். இதுகுறித்து போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை கூறுகையில், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோா், 3 பேருடன் இரு சக்கர வாகனம் ஓட்டுவோா், அதிவேகமாக பயணிப்போா், மது அருந்தி விட்டும், கைப்பேசி உபயோகித்தவாறும் வாகனம் இயக்குவோா் இந்த தீவிர தணிக்கையின்போது கண்டறியப்பட்டு, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் செல்லான் வழங்கப்படுகிறது.

கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்று அபராதம் விதிக்கப்பட்ட நபா் மீண்டும் இதே செயலில் ஈடுபட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றி காரைக்காலில் பயணித்தால், இதுபோன்ற அபராதத்தை தவிா்த்துக் கொள்ளலாம். காரைக்கால் மாவட்டத்துக்குள் நுழையும் வெளி மாநிலத்தவா்கள் போக்குவரத்து விதிகளை மதிந்து நடந்துகொள்ளவேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com