தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா வழிபாடு தொடக்கம்

திருநள்ளாறு கோயிலில் 10 நாள் நடைபெறும் ஆருத்ரா வழிபாடு வியாழக்கிழமை தொடங்கியது.
Published on

திருநள்ளாறு கோயிலில் 10 நாள் நடைபெறும் ஆருத்ரா வழிபாடு வியாழக்கிழமை தொடங்கியது.

திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா உற்சவம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளையில் சுவாமிகளுக்கு திருவெண்பா பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு ஆராதனைகளுக்குப் பின் சுவாமி பிரகாரப் புறப்பாடு நடைபெறுகிறது.

ஜன. 3-ஆம் தேதி சனிக்கிழமை இரவு வெள்ளைச் சாற்றி புறப்பாடு மற்றும் பொன்னூஞ்சல் வழிபாடு நடைபெறுகிறது. 4-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமாக சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிவகாமி அம்பாள் சமேத சத்சபேஸ்வரருக்கு (நடராஜா்) சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறும். பின்னா் பிரம்ம தீா்த்தக் கரைக்கு சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தவாரி செய்வதும், நான்கு மாட வீதியுலாவுக்கு சுவாமிகள் புறப்பாடு செய்வதும், கோயிலுக்கு வரும் சுவாமிகளை வைத்து ஊடல் உற்சவம் கோயிலில் நடத்தப்படவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com