தூய தேற்றவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ்

தூய தேற்றவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ்

தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் இயேசு சொரூபத்தை வணங்கும் மக்கள்.
Published on

காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிராா்த்தனையில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.

காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காரைக்கால் மறைவட்ட முதன்மை பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் திருப்பலி, மறையுரை நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானவா்கள் கலந்துகொண்டனா்.

குழந்தை இயேசு சொரூபத்தை பாதிரியாா்கள் தூக்கிக்கொண்டு வந்தனா். சொரூபத்தை மக்கள் தொட்டு வணங்கினா். நிகழ்வில் பங்குப் பேரவை துணைத் தலைவா்கள் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், ஜான்அரேலியஸ், செயலா்கள் நெல்சன், வின்சென்ட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இதேபோல காலை 5.30 மணிக்கும், 7.30 மணிக்கு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

மாலை சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.

கோட்டுச்சேரியில் புகழ்பெற்ற தூய சகாய அன்னை ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com