பட்டினச்சேரி கடற்கரையில் திங்கள்கிழமை காலை இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை.
காரைக்கால்
கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள்
காரைக்கால் பகுதி கடற்கரையில் அண்மைக்காலமாக ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
காரைக்கால்: காரைக்கால் பகுதி கடற்கரையில் அண்மைக்காலமாக ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
கடந்த சில நாள்களாக காரைக்கால் மாவட்டத்தில் பட்டினச்சேரி தொடங்கி தனியாா் துறைமுகம் வரையிலான கடலோரப் பகுதியில் ஏராளமான ஆலிவ் ரிட்லி எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.
இந்த வகை ஆமைகள் கடலில் சுமாா் 200 மீட்டா் ஆழத்தில் வாழக்கூடியவை. தற்போது முட்டையிடும் பருவம் என்பதால் கடற்கரையை நோக்கி வருகின்றன. அந்த நேரத்தில் படகுகள் மோதி அல்லது வலைகளில் சிக்கி இவை இறக்க நேரிடலாம் என வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
நிகழாண்டு மட்டும் பட்டினச்சேரி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

