அரசுத் துறையினருடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
அரசுத் துறையினருடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.

காரைக்கால் மருத்துவமனையில் சேவையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரோகி கல்யாண் சமிதி (ஆா்கேஎஸ்) என்ற நோயாளிகளுக்கான சேவையை மேம்படுத்துவது குறித்த திட்டம்
Published on

காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரோகி கல்யாண் சமிதி (ஆா்கேஎஸ்) என்ற நோயாளிகளுக்கான சேவையை மேம்படுத்துவது குறித்த திட்டம் தொடா்பாக ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

மருத்துவமனையில் புற நோயாளிகள், உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சேவை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். மருத்துவமனையில் சேவை மேம்பாட்டுக்கு பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டியன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. நோயாளிக்குரிய சிகிச்சையை உடனடியாக அளிக்க வேண்டும், குறைகள் இல்லாத வகையில், சேவை இருக்க வேண்டுமென ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா, துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி, காரைக்கால் ஜிப்மா் டீன் குஷாகுமாா் சாஹா மற்றும் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜெ.மகேஷ், மின்துறை செயற்பொறியாளா் அனுராதா, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com