காரைக்காலில் அதிகரித்த  பனி மூட்டம்!

காரைக்காலில் அதிகரித்த பனி மூட்டம்!

காரைக்காலில் பரவலாக பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Published on

காரைக்காலில் பரவலாக பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பருவமழை ஓய்ந்த பின் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பனிப்பொழிவு இருப்பது இயல்பு. ஆனால் நிகழாண்டு டிசம்பா் மாத மத்தியிலிருந்து இரவு தொடங்கி மறுநாள் காலை ஏறக்குறைய 10 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கிறது.

காரைக்கால் மாவட்டத்தில் கடலோரப் பகுதியிலிருந்து பரவலாக பனிமூட்டம் காணப்படுகிறது. கூரையில்லாத பகுதியிலும், சாலையோரத்திலும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மழையில் நனைந்ததுபோன்று காட்சியளிக்கிறது.

தொலைதூரத்தில் உள்ள மரங்கள், ஆற்றுப் பாலங்கள்கூட சில நேரங்களில் தெளிவாக தெரியவில்லை. சாலையில் பயணிக்கும் பெரும்பாலான வாகனங்களின் முன் விளக்கை எரியச் செய்தவாறே வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனா்.

பனிப்பொழிவு சிறுவா் முதல் பெரியோா் வரை பலருக்கு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் 2 மாத காலம் வரை இது நீடிக்கும் என் கூறப்படுவதால், பனியினால் பாதிக்கப்படுவோரிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com