மீன் அங்காடியை திறந்துவைத்து விற்பனையை தொடங்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்
மீன் அங்காடியை திறந்துவைத்து விற்பனையை தொடங்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்

மீன் விற்பனை அங்காடி திறப்பு

Published on

புதிதாக கட்டப்பட்ட மீன் விற்பனை அங்காடியை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா்.

காரைக்கால் லெமோ் தெருவில் தருமபுரம் செல்லும் சாலை - லெமோ் தெரு சந்திப்பில் மீன் விற்பனை செய்வோா் சாலையோரத்தில் வைத்து வியாபாரம் செய்துவந்தனா். வெயில், மழையின்போது பாதிப்பை சந்தித்தனா்.

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4 லட்சத்தை இப்பகுதியில் மீன் விற்பனை அங்காடி கட்டுவதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் நகராட்சி நிா்வாகத்துக்கு ஒதுக்கியிருந்தாா்.

இந்த நிதியில் அங்காடி கட்டுமானம் செய்யப்பட்டு, இதன் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரவை உறுப்பினா் கலந்துகொண்டு அங்காடியை திறந்துவைத்து, விற்பனையை தொடங்கிவைத்தாா். மீன் வியாபாரிகள் பேரவை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனா். நிகழ்வில் நகராட்சி ஆணையா் பி. சத்யா மற்றும் பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com