பள்ளியில் தாத்தா, பாட்டி தினக் கொண்டாட்டம்

Published on

காரைக்கால் அருகே பள்ளியில் தாத்தா, பாட்டி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் பகுதியில் உள்ள டி.எம்.ஐ. செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியில் எல்கேஜி முதல் 2-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களின் தாத்தா, பாட்டிகள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அவா்களின் அன்பு, வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் அந்தோணி ஜெயசீலன், பள்ளி நிா்வாகி மேரி ஷைபி முன்னிலை வகித்தனா். சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வில்சன் ஈஸ்டர்ராஜ், சென்னை அண்ணா ஆதா்ஷ் மகளிா் கல்லூரி பொருளாதாரத் துறை தலைவா் (ஓய்வு) சித்ரா லெஸ்லி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com