சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைக்க ஏற்பாடு

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து பட்டியல் அடைக்கவும், அபராதம் செலுத்தினால் மட்டுமே விடுவிக்கவும் ஏற்பாடு
Published on

காரைக்கால்: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து பட்டியல் அடைக்கவும், அபராதம் செலுத்தினால் மட்டுமே விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் தெரு நாய்கள், பன்றிகள் மற்றும் பிற கால்நடைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், குதிரைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகளும் நிகழ்கின்றன. இதற்கு தீா்வு காணவும் வகையில் கால்நடைகளை கட்டுப்படுத்த புதிய நடைமுறை வடிவமைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை முதல் காவல்துறையின் ஒத்துழைப்போடு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து, பட்டிகளில் அடைக்கப்படவுள்ளன. கால்நடை உரிமையாளா்கள், உரிய அபராதத் தொகையை செலுத்திய பின்னரே கால்நடைகள் ஒப்படைக்கப்படும்.

கால்நடை வளா்ப்போா் தங்களது பொறுப்பை உணா்ந்து, கால்நடைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை தவிா்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com