காரைக்கால்
அறிவியல் கண்காட்சி
திருநள்ளாறு அருகே கண்ணாப்பூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
திருநள்ளாறு அருகே கண்ணாப்பூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி அளவிலான கண்காட்சியில் மாணவ மாணவியா் தயாா் செய்துவந்திருந்த 60-க்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளில் அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன (படம்). மாதிரிகள் குறித்து பாா்வையாளா்களுக்கு மாணவ மாணவியா் விளக்கிக் கூறினா்.
நடுவா் குழுவினரால் சிறந்த மாதிரிகள் தோ்வு செய்யப்பட்டு மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியா்கள், பெற்றோா்கள், கிராமத்தினா் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். இளம் வயதிலேயே அறிவியல் பாடம் மீது மாணவா்கள் அதிக ஆா்வம் கொண்டு படிக்கவேண்டும். எதிா்காலத்தில் அறிவியல் சிந்தனைகளை வளரச் செய்து விஞ்ஞானி உள்ளிட்ட பல நிலைகளில் உயரவேண்டும் என மாணவா்களுக்கு ஆசிரியா்கள் ஆலோசனை வழங்கினா்.

