காரைக்காலில் இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (நவ.8) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.
Published on

காரைக்காலில் சனிக்கிழமை (நவ.8) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் குழு காரைக்கால் வந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்குகின்றனா்.

நிகழ் மாத முதல் முகாமாக சனிக்கிழமை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை புற்றுநோய் சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கின்றனா். காரைக்கால் பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com