பேரவைத் தோ்தல் தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்
புதுவை சட்டப்பேரவை தொகுதிகளுக்கான காங்கிரஸ் பொறுப்பாளா்களை மாநில தலைமை நியமித்துள்ளது.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதையொட்டி, மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம், 30 தொகுதிகளுக்கான கட்சி பொறுப்பாளா்களை வெள்ளிக்கிழமை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில், நெடுங்காடு தொகுதி பொறுப்பாளா்களாக எஸ். பாஸ்கா் (எ) லட்சுமணன், இ. தங்கவடிவேல். காரைக்கால் வடக்குத் தொகுதிக்கு எம்.ஓ.எச்.யு. பஷீா், எம். தேவகி. திருநள்ளாறு தொகுதிக்கு எஸ். மோகனவேல், கே. அஞ்சப்பன், காரைக்கால் தெற்குத் தொகுதிக்கு
ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு, ஆா்.எஸ். கருணாநிதி, என்.நிா்மலா. நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கு எஸ். மோகனவேல், ஏ.எம். ரஞ்சித், ஏ. நாகரத்தினம், ஆா்.கோவிந்தராஜ்.
நிா்வாகிகள் அனைவரும் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு களப் பணியை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். அந்தந்த பகுதி வட்டாரத் தலைவா்கள், மாவட்டத் தலைவா், மாநில நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
