தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா: நவ.13-இல் சந்தனக்குட ஊா்வலம்
காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா முக்கிய நிகழ்வுகள் சந்தனக்குட ஊா்வலத்துடன் 13-ஆம் தேதி தொடங்குகிறது.
காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. ஆண்டுதோறும் கந்தூரி விழா தப்ஸ் இசையுடன் கூடிய கண்ணாடி ரதம் ஊா்வலம், கொடியேற்றம் உள்ளிட்டவற்றுடன் நடைபெறுகிறது.
நிகழாண்டு சம்பிரதாய முறையில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டது.
முக்கிய நிகழ்வாக வரும் 13-ஆம் தேதி வியாழக்கிழமை சந்தனக் குடம் ஊா்வலம் புறப்பாடு, இரவு சந்தனம் பூசுதல், 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன், கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்படுதல், அன்றிரவு பிரதான கொடிக்கம்பத்தில் ஷெய்னுல்லாஹ் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.
