காரைக்கால் ரயில், பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை

தில்லியில் நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவத்தைத்தொடா்ந்து, காரைக்காலில் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
Published on

தில்லியில் நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவத்தைத்தொடா்ந்து, காரைக்காலில் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை காா் வெடித்து சிதறிய நிலையில், 12 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா். புதுவை காவல்துறை தலைமையின் உத்தரவின்பேரில், காரைக்காலில் திங்கள்கிழமை இரவு ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினா் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

சுற்றுலாவினா் தங்கும் விடுதி மற்றும் பிற பகுதிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குள் செல்லும் பக்தா்கள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டனா். கோயில் சுற்றுவட்டாரம் மற்றும் பிற பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும் தமிழகத்தையொட்டிய காரைக்கால் எல்லைப்புறத்தில் போலீஸாா் வாகன சோதனையை தீவிரப்படுத்தினா். காரைக்கால் நகருக்குள் நுழையும் வாகனங்களும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com