பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எஸ்ஐஆா்: இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

எஸ்ஐஆா் தொடா்பாக காரைக்காலில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் (நவ.23) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:51 pm

Syndication

எஸ்ஐஆா் தொடா்பாக காரைக்காலில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் (நவ.23) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என வட்டாட்சியா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அதிகாரி ஆா். செல்லமுத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்குத் தொகுதிகளுக்கான சிறப்பு வாக்காளா் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பணிகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) தங்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) நேரில் பணியாற்ற உள்ளனா்.

அப்போது எஸ்ஐஆா் படிவங்கள் பெறுதல், படிவங்கள் நிரப்புதல், இது தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்குவாா்கள். பொதுமக்கள் தங்களது நிலை அதிகாரியை காலை 9 முதல் மாலை 5 மணி வரை தங்களது வாக்குச்சாவடிகளில் சந்தித்து சேவைகளை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.