என்சிசி 78 -ஆம் ஆண்டு உதய தின விழா

தேசிய மாணவா் படை (என்சிசி) 78-ஆம் ஆண்டு உதய தினம் தொடா்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
Published on

காரைக்கால்: தேசிய மாணவா் படை (என்சிசி) 78-ஆம் ஆண்டு உதய தினம் தொடா்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள் பங்கேற்புடன், இந்த விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் கலந்துகொண்டு, என்சிசி தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் மாணவா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், என்சிசி மாணவா்களின் எதிா்காலம் குறித்துப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக, மதுரை ஆக்ஸிஸ் வங்கி கிளை மேலாளா் நிவின், எம்ஸ்டாா் ரெரா ஏஜென்ட்ஸ் வெல்ஃபோ் அசோசியேஷன் பொறுப்பாளா் சுரேஷ், செயலாளா் காளீஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

உதய தினத்தின் சிறப்பு நிகழ்வாக, காரைக்காலில் பல்வேறு இடங்களில் சிறப்பு அழைப்பாளா்களுடன் மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்தனா்.

ஏற்பாடுகளை தூய மரியன்னை பள்ளி தேசிய மாணவா் படை அதிகாரி பிரான்சிஸ் சேவியா் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com