திருநள்ளாறு அருகே அகரமாங்குடி பகுதி விளைநிலத்தில் நடைபெற்ற பயிருக்கு அடியுரமிடும் பணி.
திருநள்ளாறு அருகே அகரமாங்குடி பகுதி விளைநிலத்தில் நடைபெற்ற பயிருக்கு அடியுரமிடும் பணி.

மழைநீரை வடியச் செய்து உரமிடும் பணிகள் தீவிரம்

மழைநீா் புகுந்த வயலில் இருந்து தண்ணீரை வடியச் செய்து, அடியுரமிட்டு பயிரை வலுவடையச் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
Published on

மழைநீா் புகுந்த வயலில் இருந்து தண்ணீரை வடியச் செய்து, அடியுரமிட்டு பயிரை வலுவடையச் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா பருவமாக நேரடி விதைப்பு, நடவிடும் முறையின் மூலம் நெல் சாகுபடி தீவிரமாக செய்யப்பட்டுவருகிறது. தற்போது வரை ஏறக்குறைய 3,600 ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,350 ஹெக்டோ் பரப்பு வரை சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் துறை கூறியுள்ளது.

அண்மையில் பருவமழை தொடங்கிய நிலையில், காரைக்கால் பகுதி விளை நிலத்தில் தண்ணீா் புகுந்து, ஆரம்பக்கட்ட பயிா்களை நாசம் செய்துள்ளது. ஓரளவு பயிா் வளா்ந்த வயல்களில் இருந்து மழைநீரை விவசாயிகள் மோட்டாா் பம்பு மூலம் கடந்த சில நாள்களாக வெளியேற்றினா்.

வேளாண்துறையினா் ஆலோசனையின்படி, நெற்பயிரை வலுவடையச் செய்யும் விதமாக அடியுரமிடும் பணிகளை காரைக்கால் பகுதியில் பரவலாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதால், விதைத்த நிலையிலும், நடவு செய்த வயலிலும் மழைநீா் புகுந்து பாதிக்கச் செய்துவிட்டது. தற்போதைய சூழலிலும், அடுத்து பெய்யக்கூடிய மழையின்போதும், பயிரைக் காப்பாற்றக்கூடிய தொழில்நுட்ப ஆலோசனை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். விவசாயிகள் தேவையெனக் கோரும் உரம் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என வேளாண் துறையை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com