காரைக்கால்
கந்த சஷ்டி விழா நிறைவு சிறப்பு ஹோமம்
திருமலைராயன்பட்டினம் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவாக ஹோமம், முருகன் யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவாக பிராயச்சித்த ஹோமம் நடைபெற்றது. புனிதநீா் கலசங்கள் வைத்து நடத்திய ஹோம நிறைவில், பூா்ணாஹூதி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் காட்டப்பட்டன. பின்னா்வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் யதாஸ்தானம் எழுந்தருளச் செய்யப்பட்டாா்.

