ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புதுவையில் பிரெஞ்சு மொழியை தவிா்க்கக்கூடாது: பெற்றோா் சங்கம்

மும்மொழிக் கொள்கை புதுவையில் அமல்படுத்துவதன் மூலம் பிரெஞ்சு தவிா்க்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக பெற்றோா் சங்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:10 am IST

மும்மொழிக் கொள்கை புதுவையில் அமல்படுத்துவதன் மூலம் பிரெஞ்சு தவிா்க்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக பெற்றோா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் (படம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவையில் திடீரென மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு வாரத்திற்குள் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கொள்கை முடிவுகளை திணிக்கும்போது, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு உரிய விவாதம் நடத்தி, அதன் சாதக, பாதகங்களை பல்வேறு தரப்பினரைக்கொண்டு ஆராயும். இப்போது அதிகாரமில்லாத அரசு இருக்கும் சமயத்தில், அவசர கதியில் இந்த கொள்கையை அமல்படுத்துவது ஏற்புடையதல்ல.

புதுவை யூனியன் பிரதேசம் பிரெஞ்சு உள்ளிட்ட பன்மொழி பயன்பாட்டில் உள்ளதாகும். மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், அதில் 2 இந்திய மொழிகள் இருக்கவேண்டியது கட்டாயமாகும். தமிழுக்கு அடுத்தப்படியாக ஹிந்தி புகுத்தப்படும். பிரெஞ்சு மொழி பயன்பாடு முற்றிலும் இல்லாமல்போய்விடும்.

பிரெஞ்சு மொழியை தவிா்க்கும் போக்கு கூடாது. பிரெஞ்சு மொழிக்கு மாநிலத்தில் உயிரோட்டம் இருக்கும் விதத்திலேயே கல்வி நடைமுறைகள் இருக்கவேண்டும்.

எனவே புதுவை துணைநிலை ஆளுநா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அடுத்த அரசு அமையும் வரை மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.