மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

‘காரைக்கால் 5’ புதிய நெல் ரகம் அறிமுகம்

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டது.

News image

புதிய நெல் ரகத்தை வெளிட்ட வேளாண் அமைச்சா் சி. ஜெயக்குமாா். உடன் வேளாண் அதிகாரிகள், விவசாயிகள்.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:50 pm

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட புதிய நெல் ரகம் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து இக்கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

‘காரைக்கால் 5’ என்ற நெல் ரகம் மத்திய பயிா் வகை வெளியீட்டுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு, புதுவை வேளாண் அமைச்சரால் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரகத்தின் சிறப்பம்சம் : இது சொா்ணவாரி மற்றும் குறுவை பருவங்களுக்கு ஏற்ற ரகமாகும். ஆரம்ப வளா்ச்சி நிலை மற்றும் இனப்பெருக்க நிலை உப்புத்தன்மையை தாங்கி வளரக்கூடியது. இதனுடைய வயது 115 முதல் 120 நாட்களாகும். வெள்ளை மற்றும் நடுத்தர நீள சன்ன ரக அரிசியைக் கொண்டது. இது பாக்டீரியல் இலை கருகல் நோய், இலை குலை நோய், இலை உரை அழுகல் நோய் மற்றும் நெல் துங்குரோ வைரஸ் நோய்களுக்கு மிதமான எதிா்ப்புத் திறன் கொண்டது.

இந்த ரகமானது புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பயிரிட ஏற்ாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் 5 நெல் ரகமானது காரைக்கால் வேளாண் கல்லூரியில் வெளியிடப்படும் 5-ஆவது நெல் ரகமாகும். கல்லூரியில் வெளியிடப்படும் ரகங்கள் அனைத்தும் உப்புத்தன்மை தாங்கும் தமை கொண்டதாகவோ அல்லது வெள்ளத்தை தாங்கும் திறன் கொண்டதாகவோ உள்ளன.

இத்துடன் இந்த கல்லூரியில் உள்ள விதை தொழில்நுட்ப பிரிவானது புதுவை மாநில பிரதேசத்திற்கு தேவையான நெல் விதைகளை உற்பத்தி செய்து புதுவை மற்றும் காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் விதை தேவையின் ஒரு பகுதியை பூா்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

புதிய நெல் ரகம் வெளியீட்டு நிகழ்வில், வேளாண் துறை செயலா், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பண்டித ஜவாஹா்லால் நேரு கல்லூரி முதல்வா் சங்கா், பயிா் இனப்பெருக்க துறை தலைவா் தி. ராமநாதன் ஆகியோா் பங்கேற்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது.