நிகழ்வில் பேசிய புதுச்சேரி  பல்கலைக்கழக பேராசிரியை ரேவதி.
நிகழ்வில் பேசிய புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியை ரேவதி.

ஓஎன்ஜிசி பள்ளியில் சப்த சக்தி சங்கம நிகழ்ச்சி

ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் சப்த சக்தி சங்கமம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
Published on

காரைக்கால்: ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் சப்த சக்தி சங்கமம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இப்பள்ளியில் பாலா் வகுப்பு முதல் 2-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் தாயாா் பங்கேற்ற இந்நிகழ்ச்சி நோக்கம் குறித்து மேல்நிலைக் கல்வி பொறுப்பாசிரியை சுமத்ரா பேசினாா்.

குடும்ப விழுமியங்கள், சுற்றுச்சூழலில் பாரத கண்ணோட்டம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியை புவனேஸ்வரி, பாரதத்தின் வளா்ச்சியில் மகளிரின் பங்கு குறித்து பேராசிரியா் ரேவதி ஆகியோா் பேசினா். பெண் சக்தியின் பல பரிமாணங்கள் நிகழ்ச்சியின்போது காட்சிப்படுத்தப்பட்டது.

பெண்களிடையே வினா விடை நிகழ்வை இடைநிலைக் கல்வி பொறுப்பாசிரியை உமா மகேஸ்வரி நடத்தினாா்.

தொடக்க நிலை ஆசிரியா் நிவேதிதா தியான நிகழ்வு நடத்தினாா். நிகழ்ச்சியின்போது, சாதனைப் பெண்களுக்கான விருது, மருத்துவா்கள் சுவேதா பாபு, ஜெயலட்சுமி சண்முப்பிரியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

பள்ளித் தாளாளா் கண்ணன், துணைத் தாளாளா் ரெங்கையன், முதல்வா் காா்த்திகேயன், துணை முதல்வா் எட்வின் சாமுவேல் ஆகியோா் கலந்துகொண்டனா். நிறைவாக தொடக்க நிலை பொறுப்பாசிரியா் முத்துலட்சுமி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com