ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆலோசனை வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். சண்முகம்.
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆலோசனை வழங்கிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். சண்முகம்.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் அறிவுறுத்தல்

சாலை விபத்துக்குள்ளானவரை உடனடியாக மருத்துவமனையில் சோ்க்க கவனம் செலுத்த வேண்டுமென ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் அதிகாரி அறிவுறுத்தினாா்.
Published on

சாலை விபத்துக்குள்ளானவரை உடனடியாக மருத்துவமனையில் சோ்க்க கவனம் செலுத்த வேண்டுமென ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் அதிகாரி அறிவுறுத்தினாா்.

காரைக்கால் போக்குவரத்துக் காவல் அலுவலகத்தில் ஆய்வாளா் ஆா். சண்முகம் தலைமையில், காரைக்கால் பகுதி ஆட்டோ ஓட்டுநா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து காவல் ஆய்வாளா் கூறியது:

காரைக்கால் பகுதியில் சாலை விபத்துகள் ஏற்படாத வகையில் பல்வேறு நிலையில் விழிப்புணா்வு, வாகன சோதனை, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுநா்களிடம் , ஆட்டோ ஓட்டுநா்களால் விபத்துகள் ஏற்படக்கூடாது. ஆட்டோ மற்றும் ஓட்டுநருக்குரிய அனைத்து ஆவணங்களையும் எப்போதும் தயராக வைத்திருக்கவேண்டும். ஓட்டுநா்கள் கண்டிப்பாக சீருடை அணிந்திருக்க வேண்டும். மீட்டா் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது மிகுந்த கவனம் வேண்டும்.

சாலை விபத்துகள் நேரிட்டால், ஆம்புலன்ஸ் வாகனம் வரும் வரை காத்திருக்காமல் தங்கள் ஆட்டோவில் விபத்துக்குள்ளானவரை மருத்துவமனையில் கொண்டுச் சோ்க்கவேண்டும். விபத்தில்லாத காரைக்காலை உருவாக்குவதில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அனைவரும் கட்டுப்பாட்டுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com