என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுவை முதல்வருமான என்.ரங்கசாமிகோப்புப் படம்
காரைக்கால்
என்.ஆா்.காங்கிரஸ் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா
என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சியினா் கொண்டாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் கட்சி சாா்பில் கோயில்களில் வழிபாடு, இனிப்பு வழங்கல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனா். காரைக்கால் மாவட்டத் தலைவா் வி.ஆனந்தன் தலைமையில் கட்சியினா் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நிகழ்வில் பங்கேற்றனா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா்.
இதுபோல திருநள்ளாறு, நெடுங்காடு, திருப்பட்டினம் உள்ளிட்ட பேரவைத் தொகுதிகளில் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

