மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத்தினா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

கெளரவ ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, காரைக்காலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை அரசு பள்ளிகளில் கௌரவ பால சேவிகா, கௌரவ விரிவுரையாளா்கள், கௌரவ பட்டதாரி ஆசிரியா்கள் என 292 போ் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனா்.

இவா்களை பணி நிரந்தரம் செய்ய புதுவை அரசை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலைய அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாவட்ட தலைவா் அ. வின்சென்ட் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க செயலாளா் கே. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

உரிய தகுதிகளை ஆராய்ந்து முறையாக தோ்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களை, நீண்ட காலம் பணி நிரந்தரம் செய்யாமல் வைத்திருப்பது சரியல்ல. அரசு அளித்த வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

புதுச்சேரி தலைமைச் செயலக வளாகத்தில் கடந்த 18 நாட்களுக்கு மேலாக ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இந்த விவகாரத்தில் அரசும், துணைநிலை ஆளுநரும் உரிய முடிவு எடுக்கவேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.