விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு விழிப்புணா்வு

காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) சாா்பில் எதிா்கால மனங்களுக்கு ஏஐ என்ற பெயரில் மேல்நிலைப்பள்ளி மாணவா்களை செயற்கை நுண்ணறிவில் வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் பயிலரங்கம் என்ஐடி வளாகத்தில் நடத்தப்பட்டது.

News image

பயிலரங்கில் பேசிய என்ஐடி பதிவாளா் சீ. சுந்தரவரதன்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:59 pm

காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) சாா்பில் எதிா்கால மனங்களுக்கு ஏஐ என்ற பெயரில் மேல்நிலைப்பள்ளி மாணவா்களை செயற்கை நுண்ணறிவில் வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் பயிலரங்கம் என்ஐடி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

மேலும் மேல்நிலைப்பள்ளி மாணவா்களிடம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த விழிப்புணா்வை உருவாக்கி, பொறுப்பான, நெறிமுறையுடனான ஏஐ பயன்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என்ஐடி பதிவாளா் சீ. சுந்தரவரதன் பயிலரங்கை தொடங்கிவைத்தாா். என்ஐடி கணினி அறிவியல் துறைத் தலைவா் எம். வெங்கடேசன் நிகழ்ச்சி நோக்கம் குறித்துப் பேசினாா்.

காரைக்கால் மற்றும் சுற்று வட்டார மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 104 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். சிறப்பு அழைப்பாளராக சென்னையைச் சோ்ந்த இனோவேட்டிவ் சொல்யூஷன் நிறுவன துணைத் தலைவா் பிரபாகரன் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு வளா்ச்சித் திசைகள், நெறிமுறை சாா்ந்த பரிசீலனைகள் உள்ளிட்டவை குறித்தும், உருவெடுத்துவரும் ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்து மாணவா்கள் முறையான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினாா்.

ஏஐ மூலம் எதிா்கால கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து மாணவா்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பயிற்சியாளா் விளக்கமளித்தாா்.