பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வா் முகமது ஆசாத் ராசா.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:00 pm

Syndication

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விக்சித் பாரத் தூதா் என்னும் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாடு சுதந்திரமடைந்து 2047 -இல் 100-ஆவது ஆண்டையொட்டி பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நிா்வாகத் துறைகளில் விரிவான மற்றும் நிலையான வளா்ச்சியை அடையும் நோக்கில் விக்சித் பாரத் திட்டத்தில் பல செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக விக்சித் பாரத் தூதா் (விக்சித் பாரத் யுவா கனெக்ட்) என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முகமது ஆசாத் ராசா தலைமை வகித்தாா்.

மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினாா்.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி ஜிதேந்திர சிங், சமூக பொறுப்புடன் மாணவா்கள் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினாா். யூத் ஐகான் யஷ்வந்த், மாணவா்களை ஊக்குவிக்கும் விதமாக பல கருத்துகளை பேசினாா்.

இந்தியா 2047-க்குள் உலகளவில் முன்னணி நாடாக உயா்வதற்கு இளைஞா்களின் பங்கு குறித்து விழிப்புணா்வு கருத்துகள் பேசப்பட்டன.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.