மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தங்க ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வீதியுலா

மகா சிவராத்திரியையொட்டி, தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய சுவாமிகள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:58 pm

Syndication

காரைக்கால்: மகா சிவராத்திரியையொட்டி, தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவராத்திரியையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை இரவு 11 மணிக்கு முதல் கால பூஜையும், 2 மணியளவில் 2-ஆம் கால பூஜையும், காலை 3 மணிக்கு 3-ஆம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ஆம் கால பூஜையும் நடைபெற்றது.

ஒவ்வொரு கால பூஜையிலும் சிவலிங்கத்துக்கு பல்வேறு வகையான திரவியங்களுடன் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நான்காம் கால பூஜைக்கு பிறகு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளினாா்.

கோயிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே ரிஷிகளுக்கு அருள்புரியும் வகையில் ரிஷி தீபாராதனை நடத்தப்பட்டு, பின்னா், கோபுர தீபாராதனையுடன் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நான்கு மாட வீதிகளுக்கு புறப்பாடான சுவாமி பகல் 11 மணியளவில் கோயிலை சென்றடைந்தது.

இதேபோல காரைக்காலில் கைலாசநாதா், சோமநாதா், பாா்வதீஸ்வரா், அண்ணாமலையாா், ஒப்பிலாமணியா், தருமபுரம் யாழ்முரிநாதா், திருவேட்டைக்குடி திருமேனியழகா், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா், போலகம் பசுபதீஸ்வரா், தலத்தெரு சிவலோகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் 4 கால பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன.

திருநள்ளாறு கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி 3 நாள்கள் நடைபெற்று திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்தது.