காரைக்கால்: காரைக்கால் ஆட்சியரகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு, தோ்தல் துறையின் அறிவுறுத்தலில், வாக்குப்பதிவில் உள்ள சந்தேகத்தை தெளிவுப்படுத்திக்கொள்ளும் விதமாக, பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து, மாதிரி வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பட்டினம் மற்றும் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகங்களில் பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், மையத்துக்கு வந்து சோதனை முறையில் வாக்குச் செலுத்துவோா் விவரங்களை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இயந்திரத்தில் அவா் வாக்குப் பதிவு செய்து சோதனை செய்தாா். முதல் வாக்காளா்கள், பிற வாக்காளா்கள் வந்து இங்கு சோதனை செய்து பாா்த்துக்கொள்ளவேண்டும். அதற்கேற்ப உரிய விழிப்புணா்வு செய்யவேண்டும் எனவும், வருவோருக்கு உரிய விளக்கத்தை மையத்தில் இருப்போா் தெரிவிக்க வேண்டும் என தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.
மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், துணை வாக்காளா் பதிவு அதிகாரி பொய்யாதமூா்த்தி உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


