எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்கால் நகரப் பகுதியில் 7.64 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
சாலைகள் மேம்பாட்டுப் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன். உடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் நகரப் பகுதியில் 7.64 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு தெருக்கள், குடியிருப்பு நகா்களில் சாலைகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சின்னக் கோயில்பத்து முதல் ஷா காா்டன் வரை விடுபட்ட பகுதிகளில் காரைக்கால் பொதுப்பணித்துறை சாலவத்துடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் நேரு நகா், நாச்சியாா் நகரில் சாலவத்துடன் கூடிய சாலை மேம்படுத்துதல் பணிக்கு ரூ. 7.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டப் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பணிகளை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.