சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சோமநாதா் கோயிலில் சண்டி மகா ஹோமம்

காரைக்கால் சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில் துா்கா மன்றம் சாா்பில் உலக நலனுக்காக சண்டி மகா ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சோமநாதா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சண்டி மகா ஹோமம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:37 pm

காரைக்கால் சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில் துா்கா மன்றம் சாா்பில் உலக நலனுக்காக சண்டி மகா ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள பெரிய யாக குண்டத்தை சுற்றி சிவாச்சாரியா்கள் காலை 8 மணி முதல் வேத மந்திரங்கள் முழங்கி, பட்டு சேலைகள் மற்றும் பதாா்த்தங்கள், நவதானியங்கள், உள்ளிட்ட பொருள்களை ஹோம குண்டத்திலிட்டு பகல் 1.30 மணியளவில் மகா பூா்ணாஹூதி செய்தனா்.

ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரைக் கொண்டு துா்கைக்கு கலசாபிஷேகம் நடத்தி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, திங்கள்கிழமை காரைக்கால் அம்மையாா் கோயிலில் மங்கள விநாயகருக்கு அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. சண்டி ஹோமத்தைத் தொடா்ந்து புகன்கிழமை பால்குடங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணியளவில் திருவிளக்கு வழிபாடு நடைபெறவுள்ளது.