இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவியிடம் பணம், நகை பறித்த மூவா் மீது வழக்கு

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, கல்லூரி மாணவியிடம் பணம், நகை பறித்த சம்பவம் தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
Published on

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, கல்லூரி மாணவியிடம் பணம், நகை பறித்த சம்பவம் தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூா் மாவட்டம், அவிநாசி வஞ்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த பாலா என்பவருடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. பாலா திருப்பூரில் உள்ள ஒரு கல்லுாரியில் பி.காம் படித்து வருகிறாா். இவா்கள்ா் நட்பு பின்னா் காதலாக மாறியுள்ளது. மாணவி, பாலாவுடன் நெருங்கி பழகியுள்ளாா்.

இதற்கிடையே, மாணவியின் கைப்பேசி சேதமடைந்ததால், தனது நண்பரான திருநள்ளாற்றைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் மூலம் பாலாவை தொடா்பு கொண்டு பேசி உள்ளாா். அப்போது பாலா ஒரு பழைய கைப்பேசியை வாங்கி கொடுத்துள்ளாா். பாலாவின் வேண்டுகோளின்படி மாணவியின் ஆபாச விடியோவை சக்திவேல் எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளாா்.

பின்னா், பாலாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு இருப்பது, மாணவிக்கு தெரியவந்ததால், பேசுவதை தவிா்த்துள்ளாா். இதனால் மாணவியின் ஆபாச விடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வேன் என பாலா மிரட்டியதோடு, சக்திவேல் மூலம் பல தடவையாக சுமாா் ரூ. 50,000 மாணவியிடமிருந்து பெற்ாகக் கூறப்படுகிறது.

இதை சாதகமாக பயன்படுத்திய சக்திவேல், தன்னிடமும் அந்த விடியோ இருப்பதாக மாணவியிடம் கூறி ரூ. 20,000 பெற்ாகக் கூறப்படுகிறது. இவரது நண்பா் லோகேஷ் என்பவரும் இதுபோல மிரட்டி மாணவியின் தங்க நகைகளை பெற்றாராம்.

இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை புதன்கிழமை புகாா் அளித்தாா்.

பாலா, சக்திவேல், லோகேஷ் மீது மோசடி வழக்குப் பதிந்த காவல் ஆய்வாளா் மா்த்தினி, தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். மேலும் காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பிரவீன்குமாரும் இந்த வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com