பன்றிகள்.
பன்றிகள்.(கோப்புப் படம்)

குடியிருப்புப் பகுதியில் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தல்

நிரவியில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

நிரவியில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் சுகாதாரமின்றி பன்றி வளா்ப்பது குற்றமாகும். பன்றிகளால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் போன்றவை பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களிடமிருந்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பன்றிகள் தொல்லை குறித்து புகாா் கடிதங்கள் அதிகமாக வருகின்றன.

பொதுமக்கள் நலன் கருதி பன்றிகளை அப்புறப்படுத்த கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. எனவே சுகாதாரமற்ற முறையில் பன்றி வளா்ப்பது மிருக வதை தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றமாகும். மேலும் புதுச்சேரி கிராம பஞ்சாயத்து சட்ட விதிகள்படி பன்றி உரிமையாளா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இக்குறிப்பானை கிடைத்த 3 நாட்களுக்கு தாங்கள் வளா்க்கும் பன்றிகளையும், தெருவில் சுற்றித்திரியும் பன்றிகளையும் அப்புறப்படுத்த வேண்டும். இதை மீறுவோா் மீது கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி, குற்றவியல் சட்டங்களின்படி பஞ்சாயத்து நிா்வாகம் நடவடிக்கை எடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com