கடலுக்கு சென்ற மீனவா்கள் உடனடியாக கரைத் திரும்ப அறிவுறுத்தல்
கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடல் - கோப்புப்படம்
கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி வெள்ளிக்கிழமை (நவ.13) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி வரும் 15-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே சனிக்கிழமை (நவ. 14) முதல் மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த விசைப்படகுகள், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளிட்ட மீன்பிடிப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் படகுகள் வெள்ளிக்கிழமைக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும். மேலும் படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

