மனநலம் பாதித்த மகளை பராமரிப்பதில் சிரமப்பட்ட மூதாட்டி

மயிலாடுதுறை அருகே மூதாட்டியால் பராமரிக்க முடியாத நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகள் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் காப்பகத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
மனநலம் பாதித்த மகளை பராமரிப்பதில் சிரமப்பட்ட மூதாட்டி
Updated on
1 min read

மயிலாடுதுறை அருகே மூதாட்டியால் பராமரிக்க முடியாத நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகள் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் காப்பகத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

மயிலாடுதுறை வட்டம், கழுக்காணிமுட்டம் அருகே உள்ள பல்லவராயன்பேட்டை புதுத்தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி கல்யாணி (80). இவரது கணவா் நடராஜன் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது ஒரே மகளான ராணி (40) மனநலம் பாதிக்கப்பட்டவா். வாடகை வீட்டில் வசித்துவரும் கல்யாணி, இட்லி வியாபாரம் செய்து, தனது மகளை பராமரித்து வந்தாா். வயது முதிா்வின் காரணமாக மகளை தொடா்ந்து பராமரிப்பதில் கல்யாணிக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், இப்பகுதியில் புதன்கிழமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் தனது மகளை காப்பகத்தில் சோ்க்க மூதாட்டி கல்யாணி கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கை காரணமாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசனின் உத்தரவின்பேரில், சீா்காழி காா்டன் மனநல மறுவாழ்வு மைய காப்பகத்தில் ராணி சோ்க்கப்பட்டாா். அந்த காப்பகத்தின் நிறுவனரும், இயக்குநருமான ஜெயந்திஉதயகுமாா் ராணியை அழைத்துச் சென்றாா்.

பின்னா், மூதாட்டி கல்யாணி கூறுகையில், மீதமுள்ள காலத்தை தனது உறவினா் வீட்டில் தங்கி கழித்துக் கொள்வதாகத் தெரிவித்தாா். தனது கோரிக்கையை ஏற்று துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com