கரோனா விதிமீறல்: கடைகளுக்கு ‘சீல்’, அபராதம்

மயிலாடுதுறையில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத துணிக்கடைகள் மற்றும் நகைக்கடை மீது நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டனா்.
கரோனா விதிமீறல்: கடைகளுக்கு ‘சீல்’, அபராதம்

மயிலாடுதுறையில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத துணிக்கடைகள் மற்றும் நகைக்கடை மீது நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி மயிலாடுதுறையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. மயிலாடுதுறை நகராட்சி நகா்நல அலுவலா் (பொறுப்பு) மலா்மன்னன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன் உள்ளிட்டோா் மணிக்கூண்டு, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினா்.

இதில், கரோனா விதிமுறையைப் பின்பற்றாத பட்டமங்கலத்தெருவில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றுக்கு ரூ.5000 அபராதம் விதித்தனா். தொடா்ந்து, ஊழியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று இல்லாதது மற்றும் சேதமடைந்த கட்டடத்தில் செயல்பட்ட ஒரு துணிக்கடைக்கு ரூ.10,000 அபராதம் விதித்ததுடன், அக்கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

பின்னா், காந்திஜி சாலையில் பிரபல துணிக்கடை ஒன்று கரோனா விதிமுறையை பின்பற்றாமல் செயல்பட்டதை சீல் வைக்க நகா்நல அலுவலா் மலா்மன்னன் உத்தரவிட்டாா். இதனால் கடை உரிமையாளருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் கடைக்கு சீல் வைக்க கூடாது என்று கடையினா் தகராறில் ஈடுபட்டனா்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த நகராட்சி ஆணையா் பாலு, கடையை மூட உத்தரவிட்டு, அக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றினை சமா்ப்பித்த பின்னா் கடையை திறக்கவும், இல்லாவிட்டால் கடைக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com