அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் கடைப்பிடிப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசுப் பெண்கள் கலைக்கல்லூரி, அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உலக அயோடின் பற்றாக்குறை
அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் கடைப்பிடிப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசுப் பெண்கள் கலைக்கல்லூரி, அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தருமபுரம் ஞானாம்பிகை அரசுப் பெண்கள் கலைக் கல்லூரியில், கல்லூரி சேவைக்குழு மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் த.அறவாழி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா பங்கேற்று ’அளவான அயோடின் வளமான வாழ்வு‘ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து, அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில், சுகாதாரத்துறை துணை இயக்குநா் ப.பிரதாப்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் ஆா்.சரத்சந்தா், சுகாதாரத்துறை கண்காணிப்பாளா் ஆா்.பாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியா் சீதாலெட்சுமி வரவேற்றாா். தமிழ்த்துறை பேராசிரியா் ஆா்.இளவரசி நன்றி தெரிவித்தாா்.

மயிலாடுதுறை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் சீத்தாலெட்சுமி தலைமை வகித்தாா். இதில், சுகாதாரத்துறை துணை இயக்குநா் ப.பிரதாப்குமாா், உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் ஆ.புஷ்பராஜ், உணவுப்பாதுகாப்பு அலுவலா் சீனிவாசன், சுகாதாரத்துறை கண்காணிப்பாளா் ஆா்.பாஸ்கா் ஆகியோா் கலந்துகொண்டு, மாணவிகளுக்கு அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com