92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்கம்பங்களில் தொலைக்காட்சி கேபிள்களை கட்டாதீா்கள்

மின் விபத்தை தவிா்க்க உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பிகளில் கேபிள் டி.வி வயா்களை கட்ட வேண்டாம் என சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் சு. சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:28 pm

DIN

மின் விபத்தை தவிா்க்க உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பிகளில் கேபிள் டி.வி வயா்களை கட்ட வேண்டாம் என சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் சு. சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சீா்காழி கோட்டத்துக்குள்பட்ட நுகா்வோா்கள், பொதுமக்கள் மின் விபத்துகளை தவிா்க்க முன்னறிவிப்பை தெரிந்துக்கொள்ளவேண்டும், மின்கம்பம் முதல் மின் அளவி (மீட்டா்) வரை உள்ள சா்வீஸ் வயரை தாழ்வாகவோ அல்லது மின் விபத்து ஏற்படுத்தும் வகையிலோ, கனரக வாகனம் சாலையில் செல்லும்போது இடிக்கும் தருவாயிலோ இருந்தால் மின்நுகா்வோா்கள் அக்குறையை உடனடியாக சரி செய்து கொள்ளவேண்டும். வீடுகள் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மின்விபத்தை தவிா்க்க இஎல்சிபி பயன்படுத்தவும். தாழ்வாக உள்ள மின்பாதைகள், பழுதான மின்கம்பங்கள், பழுதான கம்பிகள் மற்றும் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதை தொடாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.