92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நந்தனாா் குரு பூஜையை தமிழக அரசு நடத்தக் கோரிக்கை

நந்தனாா் குரு பூஜையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நந்தனாா் குரு பூஜையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு வியாழக்கிழமை அனுப்பிய மனு:

63 நாயன்மாா்களில் ஒருவரான திருநாளைப்போவாா் நாயனாா் என்கிற நந்தனாா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம் வைத்தீஸ்வரன்கோயிலை அடுத்த ஆதனூரில் பிறந்தவா். புலையா் குலத்தில் பிறந்த இவா், தீண்டாமைக் கொடுமையால் திருப்புன்கூா் சிவலோகநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால், மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நந்தனாா் கோயிலின் வெளியே நின்றபடி தன்னை தரிசிக்க சிவபெருமானே குறுக்கே நின்ற நந்தியெம்பெருமானை சற்று விலக உத்தரவிட்டாா் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு பெற்ற நந்தனாா் அவதார தினமான புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் திருப்புன்கூா் சிவலோகநாத சுவாமி கோயிலில் குரு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டு செப்டம்பா் 27 ஆம் தேதி வரும் நந்தனாா் அவதார தின விழாவை இந்து சமய அறநிலையத் துறை மூலம் அரசே ஏற்று நடத்த வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.