92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞா் மரணத்தில் பெண் உள்பட 4 போ் கைது

சீா்காழி அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பான வழக்கில் பெண் உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே இளைஞா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பான வழக்கில் பெண் உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சீா்காழியை அடுத்த தொடுவாய் அன்னை தெரசா வீதி சுனாமி நகரைச் சோ்ந்தவா் பரசுராமன் மகன்முருகன் (26). இவா் கடந்த 5-ம் தேதி அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், முருகன் தொடுவாய் பகுதியில் உள்ள மதியழகன் என்பவா் வீட்டில் புகுந்ததாகவும், இதனால் அவரை சிலா் மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதில் இறந்ததாகவும் தெரியவந்தது என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, தொடுவாய் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ம. கவியரசன் (24), த. வெள்ளிரீசன் (44) , அ. மதுரைவீரன் ( 37), மதியழகனின் மனைவி அஞ்சம்மாள்(45) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வம், செல்வநாதன், ரவிச்சந்திரன் ஆகியோரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.