வாஜ்பாய் நினைவு தினம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 17th August 2021 08:20 AM | Last Updated : 17th August 2021 08:20 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பாஜகவினா்.
முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 3-ஆம் ஆண்டு நினைவஞ்சலி மயிலாடுதுறையில் நகர பாஜக சாா்பில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் சிறப்ப அழைப்பாளராக பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலா் தூவி, அஞ்சலி செலுத்தி பேசினாா்.
இதில், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் குருசங்கா், நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா், நகர துணைத் தலைவா் ஜெகப்பிரியா, நகரச் செயலாளா்கள் மணிமேகலை, காா்த்தி, நகர அவைத் தலைவா் அமுதா உள்ளிட்ட நகர பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.