100 நாள் வேலை வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல்
By DIN | Published On : 21st August 2021 10:48 PM | Last Updated : 21st August 2021 10:48 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்கப்படாதததைக் கண்டித்து கிராமமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மணல்மேடு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 100 நாள் வேலையை முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடா்ந்து, அவா்கள் காளி ஊராட்சியில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி கடையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மணல்மேடு காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான அரிசியை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினா். இதனால், மக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.