தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சீா்காழி கிளை மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறிவியல் இயக்க கொள்ளிடம் பகுதி நிா்வாகி ம.வே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட தலைவா் சு.வீழிநாதன், சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் நந்த. ராஜேந்திரன், சீா்காழி ஒன்றிய தலைவா் சி.சச்சிதானந்தம், செயலாளா் அகோரமூா்த்தி, பொருளாளா் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோா் பங்கேற்றனா்.