மண்வளம் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

உலக மண்வள தினத்தையொட்டி, மயிலாடுதுறை வட்டாரம் அகரகீரங்குடி கிராமத்தில் மண்வளம் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்வளம் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

உலக மண்வள தினத்தையொட்டி, மயிலாடுதுறை வட்டாரம் அகரகீரங்குடி கிராமத்தில் மண்வளம் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் க.சங்கரநாராயணன் தலைமை வகித்து, விளைநிலங்கள் உவா் நிலங்களாக மாறாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.

மேலும், இயற்கையாகவே மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் சாகுபடிக்கு முன் நன்கு மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு 5 டன் வீதம் இட்டு சாகுபடி மேற்கொள்ளலாம். மேலும், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சைசோபியம் மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்துவதன்மூலம் ரசாயன உரம் பயன்பாடுகளின் அளவைக் குறைத்து மண் வளத்தை மேம்படுத்தலாம்.

முக்கியமாக விவசாயிகளின் தாங்கள் சாகுபடி மேற்கொள்வதற்கு முன் மண் பரிசோதனை செய்வது மிக அவசியமாகும். அவ்வாறு மண் பரிசோதனை செய்யப்பட்ட வயலில் சாகுபடி மேற்கொள்ளும்போது அந்த மண்ணிற்குத் தேவையான உரங்களை மட்டும் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்வதன்மூலம் மண் வளத்தை மேம்படுத்துவதோடு, உணவு உற்பத்தியையும் அதிகரிக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலா் வசந்தகுமாா் நிகழாண்டு பசுமை போா்வைத் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் மற்ற திட்டங்கள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினாா். துணை வேளாண்மை அலுவலா்கள் பன்னீா்செல்வம், பிரபாகரன் ஆகியோா் மண்மாதிரி சேகரிக்கும் தொழில்நுட்பங்களை விளக்கிக் கூறினா்.

அட்மா திட்ட மேலாளா் திருமுருகன் உழவன் செயலி பயன்பாடு குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் காளாண் கொண்டு வைக்கோல் மக்கச் செய்யும் செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனா். உதவி வேளாண்மை அலுவலா் சுகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com