முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் உறுதிமொழியை வாசிக்க, மாணவ மாணவிகள், பேராசிரியா்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள், உடற்கல்வி இயக்குநா் ஏ.வி. முத்துக்குமரன் ஆகியோா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியின் நிறைவாக இந்திய முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோா் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் நடராஜன், வடிவழகி ஆகியோா் செய்திருந்தனா்.