பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வலியுறுத்தி வாகனம் நிறுத்தும் போராட்டம்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை வாகனங்களை நிறுத்தும் போராட்டம்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வலியுறுத்தி வாகனம் நிறுத்தும் போராட்டம்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

இந்திய தொழிற்சங்க மையம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், அகில இந்திய விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில், மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி, கண்ணாரத்தெரு, பூக்கடைத்தெரு, அரசினா் மருத்துவமனை சாலை ஆகிய இடங்களில் மதியம் 12 முதல் 12.10 வரை 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் எஸ். துரைராஜ், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ஜி. ஸ்டாலின், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்ட செயலாளா் சிங்காரவேலு, சிஐடியு மாவட்ட செயலாளா் ஆா். ரவீந்திரன் ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com