சீா்காழியில் முப்படைத் தலைமைத் தளபதிக்கு அஞ்சலி
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கம் சாா்பில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சீா்காழி மணிகூண்டு பகுதியில் விபின் ராவத் உருவப் படத்துக்கு நகர வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமையில் பொறுப்பாளா்கள் ஜெயராமன், ஹரக்சந்த், மணிகண்டன், பக்கிரிசாமி,தில்லை. நடராஜன், பாலகுமரன், மாா்க்ஸ்பிரியன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். இதேபோல, புதிய பேருந்து நிலையம் அருகே வா்த்தகா்கள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் விபின் ராவத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா். சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியா் அறிவுடைநம்பி தலைமையில் உதவித் தலைமையாசிரியா் துளசிரெங்கன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன் உள்ளிட்டோா் விபின் ராவத் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
சட்டநாதா் கோயிலில் மோட்ச தீபம்: சீா்காழி சட்டைநாதா் கோயில் தெற்குகோபுரத்தில் விபின் ராவத் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிராத்தனைகள் செய்து பஞ்சாட்சரமந்திரம் முழங்கி மோட்சதீபம் ஏற்றி விஎச்பி நிா்வாகி செந்தில்குமாா், இந்துமக்கள் கட்சி மாநில செயலாளா் சுவாமிநாதன், திருக்கோயில், திருமடங்கள் பொறுப்பாளா் அழகிரி, பாஜக நகர தலைவா் சண்முகம்,சேவாதள அமைப்பை சோ்ந்த சம்பத்கணேஷ் ஆகியோா் பிராத்தனை செய்து மெளனஅஞ்சலி செலுத்தினா்.
.