தரங்கம்பாடி அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
By DIN | Published On : 13th November 2021 05:00 PM | Last Updated : 13th November 2021 05:15 PM | அ+அ அ- |

தரங்கம்பாடி அருகே கேசவன்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தரங்கம்பாடி அருகே கேசவன்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு. க ஸ்டாலின் நேரடி ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதல்வர் முக ஸ்டாலின் தரங்கம்பாடி தாலுக்கா கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். 124 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி 15 வகையான மளிகை பொருட்கள் உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதையும் படிக்க- மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் 38 வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து அப்போது அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம் பார்வையிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார். மாவட்டத்தில் 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 7 வீடுகள் முழுமையாகவும் 246 வீடுகள் பகுதியாகவும் கனமழை காரணமாக சேதமடைந்துள்ளது.
வடிகால் வாய்க்கால்களை தூர்வாரததால் வெள்ள நீர் வடிய வழியின்றி 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் பயிர்களை அழுகி விட்டதாக விவசாயிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் அமைச்சர்கள் பெரியசாமி கே. என். நேரு, மெய்யநாதன் மற்றும் எம்பி ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட விவரங்களை முதல்வரிடம் தெரிவித்தனர்.